நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது.
இதற்கமைய, முற்பகல் 10.30 அளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், குறித்த விவாதத்தை இன்றைய நாள் முழுவதும் நடத்த நேற்று கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
அந்த யோசனை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியபோது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.