இலங்கையில் தலைநகரில் கடந்த நாட்களுக்கு முன் 9 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். 500கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுவரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேறிருப்பதாக ராய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் Abu Bakr al-Baghdadiயிடம் வாக்குறுதியளித்துள்ளனர்.
மேலும் இந்த காட்சியை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியில் கிட்டதட்ட 59 வினாடிகளில் சாஹிரா ஹசிமை தவிர மற்ற அனைவரும் முகத்தினை மூடியவாறு உறுதி மொழி எடுத்துள்ளனர்.
அவர்களுக்கு பின் பக்கமாக ஐஎஸ் கொடி வைக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் எட்டு ஜிஹாதிகள் ஒரு வட்டத்தில் நிற்கின்றனர். கையைத் தொட்டு, மெய்மறந்து ஐஎஸ் தலைவர் கலீஃபிக்கு தங்கள் விசுவாசத்தை உறுபடுத்தியுள்ளனர்.
#BREAKING: #ISIS ‘Amaq News Agency releases a 59-second video showing #SriLanka attackers pledging to #ISIS leader Abu Bakr al-Baghdadi pic.twitter.com/FfOv9gpbYS
— Amichai Stein (@AmichaiStein1) April 23, 2019