விஜய்யின் 63 வது படத்தை அட்லீ இயக்கிவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க விவேக், கதிர், யோகி பாபு என பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குனர் ஒருவர் புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன் மெர்சல் படத்திற்கும் பல பிரச்சனைகள் எழுந்தது. அதை தாண்டி அட்லீ பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து சாதனை செய்தார். இப்படத்தை ரீமேக் செய்து அதில் ஷாருக்கானை நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் அவர் கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் படியான புகைப்படத்தை பார்த்து அவரின் நிறத்தை கேலி செய்தது சர்ச்சையானது. ஆனால் அவர் அதை பொருட்படுத்த வில்லை.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி இதுவரை மூன்று படங்கள் ஹிட் கொடுத்து வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ராஜா ராணி – ரூ 50 கோடி – பிளாக் பஸ்டர்
தெறி – ரூ 156 கோடி – மெகா கம்ர்சியல் பிளாக் பஸ்டர்
மெர்சல் – ரூ 256 கோடி – ஆல் டைம் இண்டஸ்ட்ரி ஹிட்