கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பருத்தித்துறையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் உறவினர் ஒருவருடைய நிகழ்வுக்காக பருத்தித்துறை வந்து பின்னர் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்று உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலய வழிபாட்டுக்காக சென்ற போது குண்டு வெடிப்பில் மரணமானதாக தெரியவருகின்றது. குண்டு வெடிப்பு நடந்த அன்று இரவே இவர் வெளிநாடு செல்லவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி குடும்பம் வெளிநாட்டிலேயே இருந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.