நடிகைகள் பலர் சினிமாவை தாண்டி சொந்த வாழ்க்கையில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள். சமீபத்தில் சமீரா ரெட்டி, எமி ஜாக்சன் என நடிகைகள் கர்ப்பமாக இருக்கும் செய்திகள் வெளியாகி வருகிறது.
இப்போது ஒரு நடிகை அம்மாவாக போகும் விஷயம் வெளியாகியுள்ளது, ஆனால் இதில் என்ன விஷயம் என்றால் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
பாலிவுட்டின் பிரபல நடிகரான அர்ஜுன் ராம்பால் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தென்னாப்பிரிக்க நடிகை கேப்ரியலாவை காதலித்து வந்தார்.
இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று பார்த்தால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலோடு அவர்களது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அர்ஜுன் ராம்பால்