முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது பாதுகாப்புச் செயலராக உள்ள ஹேமசிறி பெர்ணான்டோவைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு ஜெனரல் தயா ரத்னாயக்க நியமிக்கப்படவுள்ளார் என்று அறிய வருகின்றது.
ஜெனரல் தயா ரத்னாயக்க 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2015 பெப்ரவரி மாதம் வரையில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்தார்.அதேவேளை, பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இராணுவத் தளபதில் சரத் பொன்சேகாவை நியமிக்கப்படலாம் என்ற தகவலும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.