தமது நாட்டில் சிங்கள் மொழி பேசும் இனமும் தமிழ் மொழி பேசும் இனங்களே வாழ்கின்றனர் இவர்களில் நான்கு மதங்களையே சகலரும் கடைப்பிடிக்கின்றனர்.
அதை மூவின மக்கள் என்று கூறுவதைவிட நான்கு மதங்களை சார்ந்தவர்கள் என்பதே சரியான கருத்தாகும். அந்தவகையில் இந்த இரு மொழி பேசும் மக்களை நிரந்தரமாக கொண்ட இந்த நாட்டில் நமது மக்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்ற காரணம் யார் என்பதை சிந்தித்து பார்த்தால் அதிகாரத்திற்காகவும் தங்களின் பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காகவும் அதன் மூலம் நிரந்தர சொத்துக்களை தங்களது பரம்பரைக்கு சேர்த்து வைக்கவே சாதாரண அப்பாவி மக்களையும் மதங்களையும் மொழியையும் வைத்து மக்களை பிரித்தாலும் நிலையை ஏற்படுத்திவருகின்றார்கள் அரசியல்வாதிகள் என்பதே கல்விமான்களின் கருத்தாக உள்ளது.
நமது நாட்டை பொருத்தவரை இந்நாடே நாம் அனைவரும் வாழ்வதற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட நன்கொடையாகும் இங்கே உயிர் வாழ அணைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதை பகிர்ந்துக்கொள்வதில் ஏற்படுகின்ற முரண்பாடுகளினால் கருத்து வேற்றுமை தோன்றுகின்ற காரணத்தாலேயே இனங்களுக்கிடையே பகமைகள் தோன்றி அதன் பிரதிபலிப்பாகவே பல்வேறு பிரச்சினைள் தோன்றுகின்றது.
இவ்வாறான விடயங்கள் பொதுவாக சகல நாடுகளில் ஏற்படுகின்ற போதும் நமது நாட்டில் நாம் அணைவரும் ஓர் அங்கம் என்ற நினைப்பை மாற்ற முக்கிய காரணமாக திகழ்வது ஒரு விலரின் கருத்துக்களினால் ஈர்கப்பட்ட சிலரின் செயற்பாடுகளாகும்.
அந்த செயல்பாடுகளினால் நமது முக்கிய அங்கமான நாட்டில் பங்கம் ஏற்படுகின்றபோது அந்த அங்கமே முதலில் பாதிப்பிற்குள்ளாகிவிடுகின்றது அதன் மூலம் அந்நாட்டில் வாழ்கின்ற இனங்களும் பாதிக்கப்படுகின்றது இதை உணராத அரசியல் தலைமைகள் பல்வேறு கருத்துக்களை தங்களின் சுய நலம் சார்ந்து முன்வைக்கின்றபோது அந்த அரசியல்வாதிகளின் இனத்திற்காண நலம் சார்ந்த கருத்தாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் முயற்ச்சியால் ஏனைய மொழிபேசும் இனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எது எப்படியாக இருப்பினும் நாடு என்ற அங்கமே பாதிப்பிற்குள்ளாகிவிடுகின்றது. நமது உடலில் எந்த ஓர் அங்கத்திலும் பாதிப்பு ஏற்படுகின்ற போது அதன் மூலம் நமது உடம்பே பாதிப்பதைபோலவே நாடு என்ற அங்கத்தில் ஏற்படுகின்ற பாதிப்பால் அங்கு வாழ்கின்ற சகல இனத்தை மதத்தை சார்ந்தவர்கள் ஏதோ ஒருவகையில் பாதிப்பை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்பதை சகலரும் உணரவேண்டும்.
எந்த ஒரு மதமோ அல்லது இனமோ ஒரு நாளும் முழு உலகத்தையும் ஓரே கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது அவ்வாரான செயல்பாடுகளைக்கொண்ட கருத்துக்களை விதைப்பவர்கள் அல்லது அந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நபர்களின் வாழ்வு சில காலத்தில் அழிந்துவிடுவதே கடந்த கால வரலாறு அதுவே எதிர்கால வரலாறாகவும் இருக்கலாம்.
எனவே நமது நாட்டில் வாழும் அணைவரும் இலங்கை திருநாட்டின் அங்கம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு அந்த அங்கத்திற்கு எந்தவொரு பங்கமும் வராது பாதுகாக்கவேண்டும் அதன் மூலமே நாம் சுபீட்சமான வாழ்க்கையை நமது எதிர்கால பரம்பரைக்கு வழங்க முடியும் அதைவிடுத்து குறுகிய சுயநல நோக்கங்களுக்காகவும் பணத்திற்காகவும் இந்நாட்டையும் இங்கு வாழ்கின்ற மக்களையும் மொழிரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிவினையையேற்படுத்து கருத்துக்களுக்கு செவிசாய்க்காது ஒற்றுமையாக தங்களின் மதம் தங்களை நல்வழிபடுத்த வேண்டும் என்ற நிலையை உணர்ந்து செயல்படுவதே இன்றைய காலகட்டத்தில் சிறந்தவழியாகும்.