கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய சகோதரர்களின் படங்களை பிரித்தானிய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது..

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்களை நடத்திய சகோதரர்களின் ஒளிப்படங்களை பிரித்தானிய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் கொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரிலா மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகியவற்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய சகோதரர்களின் படங்களே வெளியாகியுள்ளது.

இம்ஷாப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம் ஆகிய சகோதரர்களே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என அவர்களது ஒளிப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சகோதரர்களின் தற்கொலைத் தாக்குதலில் காலை உணவை உட்கொண்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.