அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 63ல் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். அந்த படத்தை முடித்தபிறது அவர் யாருடன் இணைவார் என்ற கேள்விக்கு பல முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் குறிப்பிட்டு அடிக்கடி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் தற்போது அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கிவரும் எச்.வினோத் அதற்கு முன்பே விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறினாராம். விஜய்யும் ஒரு விதமாக ஒகே சொன்னதால் அந்த கதையை டெவலெப் செய்து மீண்டும் முழு கதையை சொல்ல வருகிறேன் என கூறிவிட்டு வந்தாராம் வினோத்.
அஜித் படங்களை முடித்தபிறகு அவர் விஜய்யை வைத்து ஒரு மாஸ் படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.