எப்போதும் அதிகம் சர்ச்சைகளில் சிக்கும் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் பல தவறுகளை செய்து சிறைக்கு கூட சென்றிருக்கிறார். பல வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் மும்பையில் சல்மான் கான் ரோட்டில் சைக்கிள் ஓட்டி சென்றபோது அங்கு காரில் இருந்த ஒரு நபர் வீடியோ எடுத்ததை பார்த்து டென்ஷன் ஆன அவர் உடனே செல்போனை பிடிங்கிவிட்டாராம்.
இது பற்றி அந்த நபர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் அனுமதி இன்று வீடியோ எடுத்ததாக சல்மான் கானின் பாதுகாவலர்கள் போலீசில் புகார் கூறியுள்ளனர். அதன் பிறகு அந்த நபரிடம் செல்போனை ஒப்படைத்துள்ளனர் பாதுகாவலர்கள்.