சமூக ஊடங்கள் நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்புவோரை அடையாளப்படுத்த முடியாவிட்டால் சமூக ஊடங்கள் நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஊடக பிரதானிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

தவறான விடயங்களை பரப்புவோரை அடையாளப்படுத்த, சமூக ஊடகங்கள் சார்ந்தவர்கள் உதவ முன்வராவிட்டால் இந்நடவடிக்கையை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஊடகங்களும் சமூக பொறுப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டில் சுமூகநிலை தொடர்வதற்கு அனைத்து வகையிலும் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென குறிப்பிட்டார்.அத்தோடு, விசேடமல்லாத செய்திகளையும் விசேட செய்தியென ஊடகங்கள் தற்போது வெளியிடுகின்றன என ஜனாதிபதி கூறினார்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நாடளாவிய ரீதியில் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.