அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டு, ஒரு நாள் வாடகை ரூ.14 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு, அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் தலைநகர் போய்சில் விளைவிக்கப்பட்டது.
உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, உருவாக்கப்பட்ட உருளைக்கிழக்கு 28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையும் உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறியப்பட்டது.
அதன் பின்னர் மக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் சுற்றி வந்தது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த சுற்றுப்பயணம் முடிந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த உருளைக் கிழங்கு இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில், சொகுசு இருக்கைகள், படுக்கை மற்றும் கழிவறை என அனைத்து வசதிகளும் உள்ளன. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 ஆயிரம்) வசூலிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் மே மாதம் முழுவதும் இந்த விடுதி முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.