முன்னாள் காதலியை திருமணத்துக்கு அழைக்க போறீங்களா..?

முன்னாள் காதலியுடன் பிரேக் அப் ஆகிய புதிய திருமண பந்தத்துக்குள் நுழையவிருக்கும் ஆண்களுக்கு அவர்களது முன்னாள் காதலியை அழைக்கலாமா வேண்டாமா என சந்தேகம் எழும். இதற்கு இவற்றை பின்பற்றுக.

முன்னாள் காதலியுடன் பிரேக் அப் ஆகியும் நல்ல நட்பில் சிலர் இருப்பார்கள். அவர்கள் தங்கள் திருமணத்துக்கு முன்னாள் காதலியை அழைக்க விரும்புவர். அவ்வாறு அழைத்தால் முன்னாள் காதலி மகிழ்வாரா என சிந்தித்து முடிவெடுங்கள்.

திருமணத்துக்கு முன்னர் உடல் உறவு ஏற்பட்டிருந்தால் முன்னாள் காதலியை அழைப்பது தவறானது. உடனடியாக அந்த நட்பை துண்டிப்பது நல்லது.

ஆண்களின் பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை எனில் இதனைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

முன்னாள் காதலிமீது தங்களுக்கு அக்கறை இருந்தாலும் அதேபோல அவர்களுக்கும் இருக்கிறதா என ஊர்ஜிதப் படுத்திக்கொள்வது நல்லது.