என்னதான் வசதி வாய்ப்பு வந்தாலும் என்னதான் புதிய வகையில் மெத்தையை பயன்படுத்தினாலும் வெறும் தரையில் படுத்து உறங்கும் போது கிடைக்க கூடிய பயன் வேறு எதிலும் கிடைக்காது. அப்படி என்னென்ன பயன் தெரியுமா..?
தரையில் படுத்து உறங்கும் போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் எந்த ஒரு தவறான சீர்கேடும் ஏற்படாது.
சுளுக்கு பிடித்திருக்கு என பலரும் சொல்வார்கள் அல்லவா..? இது போன்றவர்கள் வெறும் தரையில் படுக்கும் போது அந்த சுளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
காரணம் வெறும் தரையில் படுக்கும் போது, அந்தந்த எலும்புகள் சரியான இடத்தில் உடல் அமைப்பில் பொருந்தி இருக்கும்.
முதுகு தண்டை ஆரோக்கியத்துடன் இருக்கும். மூளையுடன் நேராக இணைக்கப்பட்ட மத்திய நரம்பு மண்டலத்தை தாங்குவது உங்கள் முதுகு தண்டாகும். நிறைய பேர் முதுகு வலியால் அவதிபடுவார்கள்.
இது போன்றவர்கள் வெறும் தரையில் படுக்கும் போது, வலி குறைந்து நாளுக்கு நாள் கீழ் முதுகு வலி கூட வர விடாமல் தடுக்கும். எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
அதிக வேலைப்பளு, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து இருத்தல், ஒரு சிலருக்கு அதிக சுமை சுமப்பது என பல விஷயங்கள் உள்ளது.
இவர்களுக்கு ஏற்படும் முதுகு வலி, தலை வலி, கழுத்து வலி, நெற்றி வலி என எந்த வலியாக இருந்தாலும் சரியாகி விடும். மேலும், போர்வை தலையணை, பாய் என எதுவும் இல்லாமல் தூய்மையான தரையில் நன்கு படுத்து உறங்கலாம்.
நல்ல தோற்றத்தில் மற்றும் நல்ல நிலையில் படுக்கும்போது, உடல், மூளைக்கு தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிக்னல் அனுப்புகிறது.
இதனால் நேர்மறை எண்ணங்கள் தூண்டப்பட்டு மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.
எந்த விதமான சோர்வும் இல்லாமல் இருக்கலாம். அடுத்ததாக, சுவாச கோளாறு மற்றும் மூச்சு திணறல் எதுவுமில்லாமல் நல்ல உறக்கம் கொள்ள முடியும்.