இன்றைய இளசுகள் திருமணத்திற்கு முன்னரே காமத்திற்கு அடிமையாகி தறிகெட்டுப் போவது ஏன்….?

கட்டுப்பாடுகள் இன்றி இங்கு எதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதால்தான் உறவை வலுப்படுத்த திருமணம் என்ற கட்டுப்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கூட இன்றைய தலைமுறையினர், திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் அனுபவத்து விட்டு, திருமணத்திற்கு பிறகு விவாகரத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

இதற்கான காரணங்கள் என்ன?

காதல் முழுதாய் முளைக்கும் முன்னரே இவர்கள் உடலுறவில் திளைக்க விரும்புவது ஏன்?வாழ்வியல் மாற்றம் என்ற ஒற்றை சொல்லில் இதை அடக்கிவிட முடியாது.இதற்கு பெற்றோர், சமூகம் என பல காரணங்கள் இருக்கின்றன.

01. பெற்றோரின் கவனக்குறைவு
இன்றைய ஸ்மார்ட் போன் யுகத்தில், உலகில் நடக்கும் எந்த செயலையும், நடந்த அடுத்த வினாடியில் அறிந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது. இதில் இன்றைய சந்ததியினர் 18 வயதை எட்டும் போதே உடலுறவைப் பற்றியும் அறிந்துக் கொள்கின்றனர்.

நமது குழந்தை எதை தெரிந்துக் கொள்கின்றான், என்ன முயல்கிறான் என்பதையே நிறைய பெற்றோர்கள் தெரிந்துக் கொள்வதில்லை.

02. பாட்டி தாத்தா உறவு இல்லாமை
இன்றைய வீடுகளில் 90% பாட்டி, தாத்தா என்ற உறவு பேரன் பதின் வயதை எட்டும் போது இருப்பதில்லை. ஒன்று உயிரோடு இருப்பதில்லை. மற்றொன்று அவர்களது அரவணைப்பில் குழந்தைகள் இல்லை. பாட்டி, தாத்தாவின் அரவணைப்பு இல்லாதது கூட இவ்வாறான தவறுகளில் ஈடுபட குழந்தைகளை தூண்டுகிறது.

03. மேற்கத்திய சீரியல் மோகம்
அம்மாக்கள் வாணிராணி பார்த்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், பிள்ளைகள் கேம்ஸ்ஆப்_த்ரோன்ஸ் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சீரியல் பார்ப்பது தவறல்ல. ஆனால், பல ஆங்கில சீரியல் மற்றும் படங்களில் அதிக அளவிலான ஆபாசக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இவை, இவர்களை எதிர் பாலினத்தோடு உறவுக் கொள்ள தூண்டுகிறது.

04. காமத்திற்காக காதலை தேடும் பிள்ளைகள்
டிவி, இணையத்தளம் போன்றவற்றில் ஆபாசங்கள் அதிகரித்துள்ளதால் இன்றைய வயது குழந்தைகள், பிள்ளைகளுக்கு உடலுறவில் நாட்டம் அதிகரிக்கிறது. காமத்திற்காக காதலை கருவியாக பயன்படுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

05. நண்பர்களின் மூலம் தூண்டிவிடப்படுதல்
காதலிக்கும் போதே உடலுறவில் ஈடுபடுவது தவறல்ல என்பது போல சில நண்பர்கள் தூண்டிவிடுவது கூட ஓர் காரணமாக அமைந்துவிடுகிறது. இதுக்கூட பண்ணாட்டி நீயெல்லாம் என்னடா… என்று கூறும் ஓர் வாக்கியம் தான் பலரது வாழ்க்கையில் புயல் வீச காரணமாகிவிடுகிறது.

06. கற்பின் மதிப்பு அறியாமை
ஒப்புக்கொள்ள கசப்பாக இருப்பினும், 100% உண்மை இதுதான். இன்றை பெண் குழந்தைகளுக்கு மத்தியில் கற்பின் மதிப்பு அறியாமை நிலவுகிறது. இதற்கு மற்றொரு காரணமாக இருப்பது கூச்சம் மறந்தது. சிறு வயதிலேயே தொப்புள் தெரிய உடை அணிவித்து பழக்கிய பெற்றோரை தான் குறை கூற வேண்டும்.

மேற்கத்தியம் வேண்டாம்
நம் முன்னோர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்தது போலவே, வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தவர்கள். இப்போது தான் மேற்கத்தியர்கள் அது என்ன என்று கற்றுக் கொண்டு வருகிறார்கள். எனவே, மேற்கத்தியம் பழகுகிறேன் என்று சுய மரியாதையை இழந்துவிட வேண்டாம்.

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞ்சிகளின் தவறான வழி செயல் இதற்கு முழு முதல் காரணங்கள்…

ஆங்கில படங்கள் தான ஆபாசம் என்று பார்த்தால், இன்று தமிழ் படங்களும் எதற்கும் குறைத்தவர்கள் இல்லை என்பது போல ஆபாசத்தில் இறங்கி விட்டனர்.

இது மட்டுமின்றி இன்று சில ஹிந்தி சீரியல் ஆபாசம் மட்டும் தான் அதிகளவில் காண்பிக்கபடுகிறது. இது அதிகம் ஈர்ப்பது பள்ளிக்கூட சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை படிக்கும் வயதில் இன்று தவறான வழிகளில் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

பெற்றோர்களும் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவதில்லை இன்று சிறு பிள்ளைகள் முதலே ஸ்மார்ட போன் கைகளில் இதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. இதில் சரியான வழியை எடுக்க வேண்டும்.

நாளைய எதிர்கால இளைய தலைமுறையினர் இதை உணர்ந்து ஒவ்வொரு செயலும் செய்யவும்.

இந்த வீணாகிப் போன ஆபாசத்தில் எதுவும் இல்லை. எல்லாத்துக்கும் காலம் உண்டு. நடக்க வேண்டிய காலத்தில் எல்லாம் நடந்தால் தான் அதற்கு மதிப்பு.