இன்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத தாக்குதல்களால் 356 தமிழ் சிங்கள மக்கள் படுகொலைசெய்யப்பட்டிருக்கின்றனர்.
இதற்கு இன்று உலகமே கண்ணீர்வடித்து இலங்கை அரசிற்கு உதவுவதற்காக இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இன்று வரை படுகொலைசெய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு இந்த உலகம் என்ன மாதிரியாக எதிர்வினையை ஆற்றியிருக்கிறது?
இது தொடர்பாக தேவாலயங்களையும் மக்கள் அதிகம் கூடும் இடங்களையும் இலக்கு வைத்து நடத்தபட்ட தாக்குதல்களின் தொகுப்பு பின்வருமாறு.
1.ஒதியமலை படுகொலை 1984 டிசம்பர் 01 – 27பேர் படுகொலை
2.மன்னார் படுகொலை 1984 டிசம்பர் 04 – 59 பேர் படுகொலை
3.முள்ளியவளை படுகொலை 1985 சனவரி 16-11 பேர் படுகொலை
4.வட்டாங்கண்டல் படுகொலை 1985 சனவரி 30-35 பேர் படுகொலை
5.உடும்பங்குளம் படுகொலை 1985 பெப்ரவரி 19-40 பேர் படுகொலை
6.குமுதினி படுகொலை 1985 மே 15-43 பேர் படுகொலை
7.நிலாவெளி படுகொலை 1985 செப்டம்பர் 16-30 பேர் படுகொலை
8.மண்டைதீவு படுகொலை 1986 சூன் 10-32 பேர் படுகொலை
9.கொக்கட்டிச்சோலை படுகொலை 1987 சனவரி 28-133 பேர் படுகொலை
10.அல்லை கோவில் படுகொலை 1987 மே 29-38 பேர் படுகொலை
11.கிழக்கு பல்கலைக்கழக படுகொலை 1990 மே 23-226 பேர் படுகொலை
12.வீரமுனை படுகொலை 1990 ஜீன் 20-232பேர் படுகொலை
13.பொத்துவில் படுகொலை 30 யூலை 1990 -114பேர் படுகொலை
14.நெல்லியடிச் சந்தை மீதான குண்டுத்தாக்குதல் 29 ஆகஸ்ட் 1990-12பேர் படுகொலை
15.சத்துருகொண்டான் படுகொலை 09 செப்டம்பர் 1990-200 பேர் படுகொலை
16.உருத்திரபுரம் குண்டுத்தாக்குதல் 04 பெப்ரவரி 1991(சிறிலங்கா சுதந்திர தினத்தன்று)-11 பேர் படுகொலை(மறுநாள் படுகொலையானவர்களி்ன் இறுதிச்சடங்குககள் நடக்கும் போது அங்கேயும் குண்டுகள் வீசப்பட்டன.
17.கொக்கட்டிச்சோலை படுகொலை 12 யூன் 1991-220 பேர் படுகொலை
18.தெல்லிப்பளை துர்ககை அம்மன் கோவில் மீதான எறிகணை தாக்குதல் 30 மே 1992-10 பேர் படுகொலை
19.கொக்குவில் கற்புலத்து அம்மன கோவில் படுகொலை மற்றும் குண்டுத்தாக்குதல் 29 செப்டம்பர் 1993(1988ம் ஆண்டு இந்தியஇராணுவத்தாலும் கோயில் பக்தர்கள் 3வர் கோவிலில்ல வைத்தே சுடப்பட்டனர்)-6 பேர் படுகொலை
20.குருநகர் தேவாலயம் மீதான குண்டுத்தாக்குதல் 13 நவம்பர் 1993-10 பேர் படுகொலை(2 வயது குழந்தை உற்பட 3 சிறுவர்கள்)
21.நவாலித் தேவாலய படுகொலை 09 யூலை 1995-155 பேர் படுகொலை(1 வயது குழந்தை உட்பட 42 சிறுவர்கள்).
22.நாகர் கோவில் குண்டுத்தாக்குதல்- 22 செப்டம்பர் 1995-40 பேர் படுகொலை(20 பேர் சிறுவர்கள்)
23.அக்கராயன் வைத்தியசாலை படுகொலை 15 யூலை 1997-மூன்று பேர் படுகொலை
24.மடுத்தேவாலய படுகொலை 20 நவம்பர் 1997-சிறுவர்கள் உட்பட 40 பேர் படுகொலை
25.புனித மேரி தேவாலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுப்படுகொலை.
26.மதகுரு கருணாரட்ணம் அடிகளார் கிளைமோர் தாக்குதலில் படுகொலை தேவாலயத்தில் இருந்து திரும்பும் போது.
27.திருகோணமலை மாணவர் படுகொலை 02 சனவரி 2006- 5பேர் படுகொலை
28.மந்துவில் ஆலய படுகொலை 06 மே 2006-8 பேர் படுகொலை
29.பேசாவை தேவாலய படுகொலை 17 யூன் 2006-6 பேர் படுகொலை
30.நெடுங்கேணி அவசர ஊர்திக்கான கிளைமோர் தாக்குதல்08 ஆகஸ்ட் 2006-5 பேர் படுகொலை
31.அல்லைப்பிட்டி தேவலாய குண்டு தாக்குதல் 13 ஆகஸ்ட் 2006-12 பேர் படுகொலை
32.செஞ்சோலைப்படுகொலை 14 ஆகஸ்ட் 2006-55பேர் அனைவரும் சிறுவர்கள்.
33.சிலாவத்தை கிளைமோர் தாக்குதல் நிக்கலஸ் பிள்ளை பாக்கியரஞ்சித் அடிகளார் படுகொலைசெய்யப்பட்டார்.
34.ஐயங்குளம் கிளைமோர் தாக்குதல் 27 நவம்பர் 2007-9 மாணவர்கள் படுகொலை
35.தட்சணாமடு கிளைமோர் தாக்குதல் 29 சனவரி 2008-10 சிறுவர்கள் உட்பட 20 பேர் படுகொலை.