சினிமாவில் தான் முதல் பாகம், இரண்டாம் பாகம் என்று பார்த்திருப்போம். ஆனால், சீரியலில் பல பாகங்களை கண்ட சீரியல் என்றால் அது பிரபல ரிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் ரஷிதா.
இந்த தொடரில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை இவர் மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ படத்திலும், அதே ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘பாரிஜாதா’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பின்னர் வேறு எந்த பட வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவிலை.
சரவணன் மீனாட்சி முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது ரஷீதா எந்த ஒரு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்கவில்லை. அதனால் தற்போது பெண்களுடன் இணைந்து ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது