எமி ஜாக்சன் திருமண அறிவிப்பு..!

ஆர்யாவுடன் `மதராசபட்டினம்‘, விக்ரமுடன் `ஐ’, தனுசுடன் `தங்கமகன்’, ரஜினியுடன் `2.0’ போன்ற படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். கடந்த ஜனவரி மாதம் ஏமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டபோது தான் கர்ப்பமாக இருப்பதாக எமிஜாக்சன் தெரிவித்திருந்தார். அதில் தான் தாய்மை அடைந்திருக்கும் இந்த செய்தியை சத்தம் போட்டு உலகுக்குச் சொல்ல வேண்டும் என்ற அளவுக்கு சந்தோ‌ஷமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஜார்ஜ் பனயிட்டோவும், ஏமி ஜாக்சனும் இணைந்து அவர்களது திருமணத்திற்கான இடத்தை பார்த்து உறுதி செய்துள்ளனர். 2020-ம் ஆண்டு கிரீசில் எமி ஜாக்சன் ஜோடி திருமணம் செய்ய உள்ளது. கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்டான மிக்கனாஸ் ஐலேண்டில் தான் திருமணம் நடைபெறவிருக்கிறது.

அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களை அழைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.