காதலர் தினத்திற்கு முந்தின நாளான பிப்ரவரி 13 ம் தேதி காதலர்களால் கிஸ் டே கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அன்பின் வெளிப்பாடாக தன் காதலை முத்தத்தால் தெரிவிப்பதால் ரொமான்ஸையும் தாண்டி உடல் மற்றும் மனநலத்துக்கும் நன்மை கிடைக்கிறது. ஆதாலால் முத்தம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிரெஞ்ச் கிஸ்:-
ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆன இந்த முத்தத்தில் பல விதம் இருக்கிறது அதில் கிளுகிளுப்பான ஒன்று தான் பிரெஞ்ச் கிஸ், இது பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் சர்வசாதாரணமாக இடம்பெறுவதுண்டு. உதட்டை கவ்வி, நாவை சுழற்றி, எச்சிலை உறிந்து தன் ஒட்டுமொத்த காதலையும் ஒருசில நிமிட முத்தத்தால் வெளிப்படுத்துவது தான் இந்த பிரெஞ்ச் கிஸ்.
இது முதலில் ’ஸோல் கிஸ்’ என்றுதான் அறியப்பட்டு வந்தது. பிரெஞ்சின் பழங்கால கலாசாரத்தின் படி இரண்டு ஆத்மாக்கள் இந்த முத்ததில்தான் இணைகிறது எனக் கருதினார்கள்.
பட்டர்ஃபிளை கிஸ்:-
காதலர்கள் ஒருவருக்கொருவர் பட்டாம்பூச்சி போல கண்ககளை உரசிக்கொண்டு மிக நெருக்கமாக நின்று கட்டியணைத்தபடி தரும் முத்தம் இது. ஜோடிகளின் கண் இமை முடிகள் ஒன்றோடு ஒன்று உரச வேண்டும். அந்த அளவுக்கு நெருக்கமா நின்றபடி கொடுத்தால் ஒருவருக்கொருவர் எந்த அளவிற்கு அக்கறை வைத்துள்ளார்கள் என்பதை காட்டிவிடும் இந்த முத்தம்.
ஏர் கிஸ் :-
இருப்பதிலே ரொம்ப மொக்கையான முத்தம் இதுதான். காதலின் ஆரம்ப காலகட்டத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் இந்த முத்தம் பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் தங்களது ரசிகர்களுக்கு தூரத்தில் இருந்தவாறும் கொடுப்பதுண்டு. இந்த முத்தத்தின் அர்த்தம் என்னவென்றால், எந்த பந்தமும் இன்றி யாரென்றே தெரியாத ஒருவர் தங்கள் மீது காட்டும் அளவுக்கடந்த அன்பிற்கு நன்றி செலுத்தும் விதத்தில் கையால் முத்தத்தை காற்றில் பறக்கவிடுவது தான் ஏர் கிஸ்.
ஃக்யூக் கிஸ்:-
காதலிரின் மூடிய உதடுகளில் ஒத்தி எடுத்தார்போல் கொடுப்பதுதான் இந்த ஃக்யூக் கிஸ் நீங்கள் வேலைக்கு செல்லும் நேரத்திலே அல்லது உங்கள் காதலர் வேலையில் இருக்கும்போதோ சட்டுன்னு கொடுத்து விட்டு செல்வதற்கு இந்த முத்தம் உதவும்.
லிப் லாக்:-
“காதல் இல்லா காமமும் இல்லை, காமம் இல்லா காதலும் இல்லை” அப்படி காதலும் காமமும் கலந்த அன்பின் வெளிப்பாடே இந்த லிப் லாக் கிஸ். உங்கள் காதலருடனான உறவில் அதீத தீவிரத்தை உணர்த்தும் முத்தம் இதுதான். இரண்டு உதடுகள் காணாது என்பது போல் காதலரின் உதட்டை இழுத்து உங்கள் உதட்டுடன் லாக் செய்து கொள்ளும் முத்தமிது.
டீப் கிஸ்:-
காதை மென்மையாக முத்தமிட்டு கடித்து பின் நாக்கு நலம் விசாரித்து கொடுக்கும் முத்தம் உங்கள் காதலருடனான உறவின் தீவிரத்தை வெளிப்படுத்தவும் உங்கள் காதலரின் உணர்ச்சியை தூண்ட ஒரு ஃபோர் ப்ளேயின் முதல் தொடக்கமாக இந்த முத்தம் அமையும் என ஆராய்ச்சியாளரும் தெரிவிக்கின்றனர்.
நெக் கிஸ்:-
முன்பக்க கழுத்து ரொம்பவே சென்ஸ்டிவ்வான இடம். பின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் முத்தம் கொடுத்தால் அது பெண்களை சிலிர்க்க வைக்குமாம். மேலும் உறவில் நெருக்கத்தை விரும்பும் காதலர் தன் காதலின் முன்பக்க கழுத்தில் முத்தமிட்டு தன் காதிலியின் நொடி நேரத்தில் திசைதிருப்பிவிடலாம்.
இதில் எந்த முத்தம் உங்கள் சாய்சோ அதை உங்கள் ஜோடிக்கு கொடுத்து அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தி காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.