கோபம் ( Angry ), இதனை எப்போதோ ஒருமுறை காண்பித்தால்தான் அதற்கு மதிப்பு அதிகம். அடிக்கடி கோபப்பட்டால் அதற்கு மதிப்பு கிடையாது.
எங்கே கோபப் படவேண்டுமோ அங்கே கோபப்பட வேண்டும். அந்த கோபமும் உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ எந்த பாதிப்புக்களையோ அல்லது உறவுகளுக்கிடை யே விரிசல்களோ ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
அவர்கள் செய்த தவற்றை, உணர செய்யவேண்டும். அதுதான் உங்கள் கோபத்திற்கு கிடைத்த நல்பரிசு.
யாராவது ஏதாவது சொல்லிவிட்டால், குறிப்பாக பெண்கள், கோவத்தின் உச்சிக்கே சென்று விடுவர். அவர்களைக் கட்டுப்படுத்த ஆண்களுக்கு பெரும் சவால்தான்.
ஆகவே அத்தகைய பெண்கள் தங்களுக்குள் எழும் கோபத்தை முற்றிலும் தவிர்க்க சில எளிய மா மருந்து ஒன்று அதுதான் மறதி.
மாமியாரின் நக்கல் பேச்சுகளைக் கேட்கும் மருமகளுக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து
மருமகளின் அடாவடியை வேடிக்கை பார்க்கும் மாமியாருக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து
கணவனின் கோமாளித்தனத்தை பார்க்கும் மனைவிக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து
மனைவியின் முட்டாள் தனத்தை காணும் கணவனுக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து
அண்ணனின் அதிகாரத்தை பொறுத்துகொள்ளும் தம்பிகளுக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து
தம்பியின் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும் அண்ணன்களுக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து
அக்காளின் அதட்டல்களால் மனம்வெதும்பு தங்கைகளுக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து
குழந்தைகள் தெரியாமல் பேசும் வார்த்தைகளால் புண்படும் பெற்றோருக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து.
பெற்றோர் ஏதோ கோபத்தில் பேசும்போது பிள்ளைகளுக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து.
உறவுகளின் உதாசீனங்களால் நமக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து.
நண்பர்களின் தவறுகளால் புண்பட்ட நமக்கு கோபம் எழும்போது மறதி ஒரு மா மருந்து.
உங்கள் நலத்தை விரும்புபவர்கள், நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று எந்நேரமும் உங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள், உங்களின் உடல்நலனில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் உடனே ஓடிவந்து உங்களுக்கு தேவை யான பணிவிடைகள் செய்பவர்கள், உங்களுக்கு துன்பம் என்று வந்துவிட்டால், சாய்ந்து கொள்ள தோளும், அழுது புலம்ப மடியும் கொடுப்பவர்கள் இவர்களில் யாராவது கோபத்தில் ஏதாவது சொல்லி விட்டால், அதனை அந்த நொடியே மறந்து விட்டு எப்போதும் அவர்களிடம் அன்புடனும் ஆதரவுடனும் இருந்திட வேண்டும் அப்போதுதான் உறவுகள் உறுதியாகும்.
நட்புகள் நலம்பெறும். அவர்கள் ஏதோ கோபத்தில் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டுவிட்டு நீங்களும் பதிலுக்கு பதில் கோபப்பட்டால் உறவுகள் உலர்ந்துபோகும். நட்புகள் நலிந்து போகும்.