எப்படி இருந்த பாகுபலி நடிகர் இப்படி மாறிட்டாரா?..

நடிகர் ராணா எலும்பும், தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாகுபலி படத்தில் கும்மென்று இருந்த ராணாவை தற்போது பார்ப்பவர்களால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை. காரணம் மனிதர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக உள்ளார்.

அவர் உடம்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. வேணு உடுகுலா இயக்கி வரும் விரத பர்வதம் 1992 படத்திற்காக தான் இப்படி ஒல்லிக்குச்சியாகியுள்ளார். இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த விரத பர்வதம் 1992 படத்திற்காக ராணா இப்படி ஆளே மாறிப் போயுள்ளதை பார்த்து அவரின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறார்கள். படத்திற்கு தேவைப்பட்டால் உடல் எடையை ஏற்றி, இறக்குவதில் ராணா கெட்டிக்காரராக உள்ளார்.

என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்று படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருந்தவர் விரத பர்வதம் படத்திற்காக ஒரேயடியாக ஒல்லியாகிவிட்டார். நடிகர்கள் படத்திற்காக உடல் எடையை ஏற்றுவதும், குறைப்பதும் வழக்கமாகிவிட்டது.

நடிகர்கள் போன்று படத்திற்காக வெயிட் போட நடிகைகள் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராணாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது