யாருக்கெல்லாம் இரண்டாவது திருமணம் நடக்கும் தெரியுமா?

வாழ்க்கையில் திருமணம் என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருப்புமுனையாக இருக்கும் திருமணம் அனைவருக்கும் வெற்றிகரமான, மகிழ்ச்சியான திருப்புமுனையாக இங்கே பலபேருக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

அனைவருக்குமே முதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் அது சரியாக அமையவில்லை என்றாலோ அல்லது தோல்வியில் முடிந்தாலோ மறுமணம் செய்து கொள்வதில் எந்த தப்பும் இல்லை. உங்கள் கைரேகையை பார்த்தே உங்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்குமா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடலாம்.

திருமண ரேகை

உங்கள் கையில் எத்தனை திருமண ரேகைகள் இருக்கிறதோ உங்களுக்கு அத்தனை திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுவார்கள். ஆனால் இது கொஞ்சம் கூட உண்மையில்லை. சிலருக்கு ஒரு திருமண கோடு மட்டும் இருக்கும் ஆனால் அவர்கள் பல திருமணம் செய்து கொள்வார்கள். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண ரேகைகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் முதல் திருமணத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்

விவாகரத்து

உங்களின் தெளிவான திருமண ரேகையில் குறுக்கீடு இருந்தால் உங்களுக்கு விவாகரத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எத்தனை குறுக்கீடுகள் இருக்கிறதோ அத்தனை இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட தெளிவான திருமண ரேகை உங்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையை குறிக்கும்.

இரண்டு கோடுகள்

உங்களுக்கு ஒரே நீளத்திலான இரண்டு திருமண கோடுகள் இருந்து அது சுண்டு விரலுக்கு கீழே இருக்கும் பகுதியையும், இதய கோட்டையும் பிரித்தால் நீங்கள் குறைந்தது இரண்டு திருமணமாவது செய்து கொள்வீர்கள். உங்களின் திருமண வாழ்க்கை எப்போதும் சோதனைகள் நிறைந்ததாக இருக்கும். இன்னொரு வகையில் இது உங்களை எதிர்பாலினத்திரிடையே அதிக பிரபலமாக்கும். இதனால் திருமணத்திற்கு வெளியேயான உறவுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.

சிறிய ரேகை

உங்கள் திருமண ரேகைக்கு அருகிலேயே மற்றொரு தெளிவான சிறிய கோடு இருந்தால் உங்களுக்கு நிச்சயம் திருமணத்திற்கு வெளியே மற்றொரு உறவு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட கோடானது உங்களுடைய வெளி உறவை குறிக்கும், ஆனால் அடிப்படையில் நீங்கள் நல்லவராக இருப்பதால் உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியில் முடியாது.

இதய ரேகை

உங்கள் திருமண ரேகை வளைந்து இதய ரேகை நோக்கி போனால் உங்கள் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்காது. உங்கள் வாழ்க்கை பிரிந்து வாழ்வது அல்லது விவகாரத்தில் முடியும். உங்கள் திருமண ரேகை இதய ரேகையையும் தாண்டி ஆயுள் ரேகை நோக்கி சென்றால் உங்கள் திருமண வாழ்க்கையை யாராலும் காப்பாற்ற இயலாது.

பல கோடுகள்

உங்கள் திருமண ரேகைக்கு அருகே நான்கு அல்லது அதற்கும் மேலான சிறிய ரேகைகள் இருப்பின் நீங்கள் எதிர்பாலினத்தாரிடம் மிகவும் பிரபலமானவராக இருப்பீர்கள். ஆனால் தெளிவான திருமண ரேகை இல்லாத பட்சத்தில் அது உங்கள் திருமண வாழ்க்கையில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

திருமண ரேகை முறிவு

உங்கள் திருமண ரேகையில் முறிவு ஏற்பட்டால் அது உங்கள் வாழ்க்கையில் மறைமுகமாக பல பிரச்சினைகள் ஏற்பட போவதன் அடையாளமாகும். தம்பதிகள் இருவருக்குள்ளும் கருத்துக்கள் ஒத்துப்போகாது அல்லது தாம்பத்யம் திருப்திகரமானதாக இருக்காது. இதனால் அடுத்த திருமணத்திற்கு தயாராக நிறைய வாய்ப்புள்ளது.

சின்னம் 8

ஒருவேளை உங்கள் தலைமை ரேகை அல்லது இதய ரேகையில் 8 போன்று இரண்டு வட்டங்கள் இருந்தால் உங்கள் திருமண வாழக்கை பல திருப்பங்களும், மோதல்களும் நிறைந்ததாக இருக்கும். இதனால் ஒன்று சகித்து கொண்டு வாழ்வீர்கள் இல்லையெனில் அடுத்த உறவை நோக்கி நகர்வீர்கள்.