இந்தியாவில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் முசாஃபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்வி லோஹன் என்பவர் இரு பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை சஞ்வி லோஹனின் மனைவி வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து சஞ்சி வேறு இரு பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அந்த இரு இளம்பெண்களும் இதற்குப் பயந்துள்ளனர். ஆனால், தன் கணவன் ஏற்கெனவே இரு பெண்களை வன்புணர்வு செய்யும் வீடியோவை காட்டிய மனைவி ரீதா அவர்களை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இரண்டு பெண்கள் அவர்களது உறவினர்களுடன் இதுபற்றி கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சஞ்வி ஹோலனும் அவரது மனைவி ரீதாவையும் பொலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.