வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் வெடிபொருள் மீட்பு

வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றிலிருந்து சி.4 ரக அதிக பலம் வாய்ந்த வெடிபொருள் 1 கிலோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூவரையும் வெடிபொருட்கள், முச்சக்கரவண்டி என்பவற்றுடன் இராணுவத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.