நான்காம் எண்ணைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்கள் மற்ற பிறப்பு எண்கள் கொண்டவர்களை விட தனித்துவமான அம்சங்கள் கொண்டவராக இருப்பதாக எண்கணிதம் குறிப்பிடுகிறது.
அந்தவகையில் எண் நான்கை அதிர்ஷ்ட எண்ணாகக் கொண்டவரின் சிறப்பம்சங்களை பற்றி இங்கு காணலாம்.
பொதுப்பண்புகள்
சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதை அதிகம் விரும்பும் நபராக இவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகமாக இருக்கும். பொறுப்பு, பணம் போன்ற விஷயங்களில் எப்போதும் சில பிரச்சனைகள் இருக்கும்.
எண்கள் 4 பிறப்பு எண்ணாக உள்ளவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். கடின உழைப்பாளிகள். தங்கள் வேலையில் சிறந்த முடிவுகளுக்காக எந்த ஒரு சூழலையும் எதிர்கொண்டு கடின உழைப்பால் வெற்றி காண்பார்கள்.
பணப்புழக்கம் அதிகம் இருப்பவர்கள். அவர்கள் அணுகுமுறையில் பகுப்பாய்வு, நடைமுறை மற்றும் ஒழுக்க நெறியுடன் இருப்பதால், மற்றவர்கள் எளிதில் கவரும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள்.
அதே சமயம், மற்றவர்களைப் பற்றி கவலை படுவதை விட அதிகமாக தன்னைப் பற்றி கவலைப்படுவார்கள். அதனால் மற்றவர்களின் பிரச்சனையில் சிக்க மாட்டார்கள்.
இந்த பூமியில் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்கும் பண்பு எண் நான்கை பிறப்பு எண்ணாக கொண்டவர்களுக்கு உண்டு. இந்த நபர்கள் மிகவும் நம்பகமானவர்கள், விசுவாசமானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள்.
அவர்கள் மற்றவர்களுக்கு வெகுவாக ஊக்கத்தைக் கொடுக்கும் நபராக விளங்குவார்கள். அவர்கள் தங்கள் தனித்தன்மையை நிரூபிப்பதற்காக எந்த ஒரு போராட்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
இந்த நபர்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்த விதத்தில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து அல்லது ஒழுங்கமைப்பதில் மற்றும் நிர்வகிப்பதில் சிறந்தவர்கள்.
இவர்கள் நம்பகத்தன்மை உடையவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருப்பார்கள். மேலும் முடிவெடுக்கும் விதத்தில் நடைமுறை ரீதியாக தங்கள் முடிவுகளைத் தீர்மானிப்பார்கள்.
மிகவும் கடினமானவர்கள் மற்றும் பிடிவாத குணம் உடையவர்கள். அவர்கள் சிந்தனையில் குறுகிய மனப்பான்மைக் கொண்டவர்கள்
அதே சமயம், தங்கள் உணர்ச்சிகளை மறைக்கும் திறன் கொண்டவர்கள், அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்களின் அன்பை புரிந்து கொள்ளும் குணம் அற்றவராக இருப்பார்கள்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயங்கள் என்ன?
அதிர்ஷ்ட நாள் – ஞாயிறு மற்றும் சனிக்கிழமை
அதிர்ஷ்ட நிறம் – தங்க நிறம்
அதிர்ஷ்ட கல் – கோமேதகம்
அதிர்ஷ்ட எண் – 31
அதிர்ஷ்ட மாதங்கள் – பெப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்ட்
அதிர்ஷ்ட உலோகம் – தங்கம்
அதிர்ஷ்ட எழுத்துக்கள் – A, D ,J, M, Q, T, மற்றும் Y
அதிர்ஷ்ட திசை – கிழக்கு மேலும் வாழ்க்கை முறை