அங்காரகனின் ஆதிக்கத்தில் இருக்கும் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் சிறந்த நட்சத்திரம் என்றால் சித்திரை நட்சத்திரம் என்று சொல்லலாம். எல்லா சுபகாரியங்களையும் இந்த நட்சத்திர நாளில் செய்யலாம். சித்திரை நட்சத் திரத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதங்கள் கன்னிராசிகளைக் கொண்டது. மூன்று மற்றும் நான்காம் பாதங்கள் துலா ராசியைக் கொண்டது. வட்டத்தின் நடுப்புள்ளி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது இந்நட்சத்திரம்
சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் சூரியனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். சூரியன் என்பதால் இயல்பிலேயே திறமை மிக்கவர்களாக விளங்குவீர்கள். உழைப்பதற்கு அஞ்ச மாட்டீர்கள். தைரியத்தை குறைச்சலாக பெற்றிருப்பீர்கள்.
யோசனை இல்லாமல் திட்டமிடுவதை விட யோசித்து செயலாற்றினால் மேலும் நன்மைதான் கிடைக்கும்…
சித்திரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் புதனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். எல்லாமே தர்மவழி என்பதே உங்கள் வழியாக இருக்கும். இறைபக்தி மிகுந்த உங்களுக்கு தன்னம்பிக்கையும் கூடுதலாக இருந் தால் வாழ்வில் எல்லாமே வெற்றியாக இருக்கும்.
சித்திரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதிபதி சுக்கிரன். குடும்பம், நட்பு, சுற்றம் என அனைவரிடமும் அன்பாக பாசமாக இருப்பீர்கள். உங்களைச் சுற்றி எப்போதும் நல்ல குணம் கொண்ட கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சுயநலம் பாராது பொதுநலம் பார்க்கும் நல்ல குணத்தை இயல்பிலேயே பெற்றிருப்பீர்கள்.
சித்திரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்கள் செவ்வாய் பக வானை அதிபதியாக பெற்றவர்கள். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். செவ்வாயின் ஆதிக்கத்தால் பேச்சாற்றலில் திறமையாக செயல் படுவீர்கள். தொழிலை தலைமை தாங்கி நடத்தி செல்லும் பொறுப்பு இயல்பாகவே உண்டு.
சித்திரை நட்சத்திரத்தின் முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நட்சத்திரக் காரர்களுக்கான பொதுவான குணநலன்கள் வாழ்க்கையில் தடங்கலை பொருட் படுத்தமாட்டீர்கள். முன் கோபிகள், விஸ்வர்கர்மா பிறந்த நட்சத்திரம் என்பதால் பிறப்பிலேயே ஆக்கும் சக்தியைக் கொண்டிருப்பீர்கள். மனதில் பட்டதை மறை யாமல் பேசும் குணநலன்களைக் கொண்டவர்களாக இருப்பீர்கள்..