நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும், நடிகர் ராகவா லாரன்சுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நிலவி வருகிறது. சீமானுக்கு ஆதரவாக சிலரும், லாரன்சுக்கு ஆதரவாக சிலரும் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் சீமானுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செயல்பட்டு வருகிறார். லாரன்ஸ் மீது கடும் விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார். இதற்கு லாரன்ஸ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருநங்கைகள் ஒன்றுகூடி லாரன்சுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்தனர்.
இந்நிலையில் அதிரடியாக பரபரப்பு அறிக்கை ஒன்றை தற்போது ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுபவர்களை பற்றி கவலைபடாதீர்கள். என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள். அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்.
நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம் என்றார்