உங்கள் வாழ்க்கை துணைக்கு கண்டங்கள் ஏற்படாமல் இருக்க செய்யும் பரிகாரம்

மனித உறவுகளில் ஒருவரின் இறுதி காலம் வரை வருகிற பந்தம் கணவன் அல்லது மனைவி என்கிற உறவாகும். திருமணம் செய்த பிறகு ஒரு ஆணின் வாழ்வில்  அவனுக்கு மிகுந்த பலமாக இருப்பது அவனின் மனைவி எனும் உறவு. ஆனால் ஒரு சில கணவர்களின் வாழ்வில் அவர்களது மனைவி ஆபத்துகளையும், கண்டங்களையும் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இவற்றிற்கான தீர்வுகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் அவரது லக்னம் எனப்படும் முதல் வீட்டிற்கு அடுத்த வீடான இரண்டாம் வீட்டில் சூரியன் இருந்தால், அந்த சூரியனின் தசாபுக்தி நடைபெறும் காலத்தில்  குடும்பத்தில் வீண்சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு அதன் காரணமாக அவர் மனைவி தற்கொலை செய்யும் சூழல் ஏற்படும். சந்திரன் இரண்டாம் வீட்டில் இருந்து சந்திர தசாபுக்தி நடைபெறும் போது மனைவிக்கு தண்ணீர் கண்டம் ஏற்படும். மற்ற கிரகங்கள் இருந்தால் அந்த கிரகங்களுக்கு ஏற்ற ஆபத்துகள் மனைவிக்கு ஏற்படாமல். இவற்றை தவிர்க்க கீழ்கண்ட பரிகாரங்களை கணவன் – மனைவி ஆகிய இருவரும் செய்து வருவது அவசியம்.

கணவன் மனைவி இருவரும் மாதந்தோறும் வரும் பௌர்ணமி திதி அல்லது சித்ரா பௌர்ணமி திதி தினத்தில் பௌர்ணமி விரதம் மேற்கொண்டு வனதுர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால்,  கணவன்– மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் ஏதும் ஏற்படாது. கணவனின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருக்கும் கிரகங்களால் மனைவிக்கு ஏற்படவிருக்கும் கண்டங்கள், ஆபத்துகள் நீங்கும். குறைந்தது ஐந்து பௌர்ணமி திதி காலம் வரை இத்தகைய விரத வழிபாடு செய்ய வேண்டும்.

தங்கள் வன துர்க்கை ஊர்களில் வனதுர்க்கை கோயில் அமைய பெறாதவர்கள் பௌர்ணமி திதி விரதம் இருந்து அன்றைய தினத்தில் காலையில் பசுமாட்டிற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பசுவின் வாலை தொட்டு வணங்கி வந்தால், கணவன் ஜாதகத்தில் இருக்கும் பாதகமான அமைப்பால் மனைவிக்கு ஏற்படவிருக்கின்ற தோஷங்கள், கண்டங்கள் நீங்கும். இந்த பரிகாரத்தையும் ஐந்து பௌர்ணமி திதிகளுக்கு செய்ய வேண்டும். இதையும் படிக்கலாமே: தொழில், வியாபாரம் அதிக லாபம் பெற பரிகாரம் இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.