உங்கள் ராசிக்கு இந்த படிப்பை தெரிவு செய்யுங்க!

ஜோதிடத்தில் ஒருவரின் ராசியை வைத்து அவர்களுக்கு எந்த படிப்பை தேர்வு செய்தால், எதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்கும் என்பதை கூறிவிடலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள், ராணுவம், அறுவை சிகிச்சை டாக்டர், ரத்தப்பிரிவைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூடப்பணி, அறுவை சிகிச்சைக்குரிய கருவிகள் தயாரிப்பு, காவல் துறை, சிவில் என்ஜினீயரிங், பொதுச் சேவை மக்கள் தொண்டு போன்ற துறைகள் சிறந்தகாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் கலைத்துறையான சினிமா இயக்குனர், டப்பிங் ஆர்டிஸ்ட், கேமரா மேன், மேக்கப் மேன், சின்னத் திரை, காஸ்ட்யூமர், அழகு நிலையம் நடத்துபவர் மற்றும் கணினித் துறை இது போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பத்திரிகைத் துறை, நானோ டெக்னாலஜி, விவசாயத் துறை, வழக்கறிஞர், அக்கௌண்டண்ட், ஆடிட்டர், பைலட், கதை, கட்டுரைப் படைப்பு, ஏஜென்ட் துறை, மார்க்கெட்டிங், கணினிப் பொறியாளர் இது போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் விவசாயம், நீராவி இயந்திரத்தில் பணிபுரிதல், கடல் பொருட்கள், சங்குப் பொருட்கள், மீன் உணவகம், மரைன் இன்ஜினீயரிங் இது தொடர்பான பணிகளில் ஈடுபடலாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் அரசுத் துறை, அலுவலக கிளார்க், அமைச்சர் பணிகள், டாக்டர் தொழில், பொன் நகை, காண்ட்ராக்டர் வேலை, அரசியல், நூல் வியாபாரம், டெக்ஸ்டைல் டெக்னாலஜி இது போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் சித்த மருத்துவம், ரியல் எஸ்டேட், கணக்குத் துறை, ஆடிட்டர், நாடகத்துறை, எடிட்டிங், போட்டோகிராபி, பத்திரிகைத் துறை, வழக்கறிஞர், மார்க்கெட்டிங் துறை, கணினிப் பொறியாளர், இது போன்ற வேலைகள் சிறப்பாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், சவுண்ட் இன்ஜினீயரிங், ஏரோ ஸ்பேஸ், ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங், பைலட் சினிமா இயக்குனர், பிலிம் டெக்னாலஜி இது போன்ற துறைகளில் ஈடுபடாலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் டாக்டர், ராணுவம், மருந்து தயாரிப்பு, உயிர் வேதிப்பொருட்களைப் பற்றிய என்ஜினியரிங், அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள், ரத்தப்பிரிவுகளைக் கண்டறியும் படிப்பு, லேப் டெக்னிசியன்ஸ் துறை. அஞ்சல் துறை, காவல் துறை இது போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் ஆன்மிகப் பணியில் ஈடுபடுதல், போதித்தல், டீச்சர், தங்க நகை செய்பவர், நகைக் கடை நடத்துபவர், அமைச்சர், ஆலோசகர், வங்கிப் பணி, ஆடிட்டர் இது போன்ற துறைகள் சிறப்பாக அமையும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் நிலக்கரிச் சுரங்கம், கட்டடத்தொழில், இயந்திரப் பணி, இறைச்சி வியாபாரம், பஞ்சாயத்துத் தலைவர், தொழில் சங்கத் தலைவர், வான்வெளி துறை, இரும்பு சம்பந்தப்பட்ட பணி போன்றவற்றில் ஈடுபடலாம்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் அகழ்வாராய்ச்சி தொடர்புள்ள தொல்பொருள் ஆராய்ச்சி படிப்பு, பி.டெக் கெமிக்கல் என்ஜினீயரிங், பி.டெக் தோல் தொழில் நுட்பம் நெசவுத் தொழில்நுட்பம் இது போன்ற துறைகளை தேர்வு செய்யலாம்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் புரோகிதர், ஆன்மிகப் பணியில் ஈடுபடுதல், ஆசிரியர் பணி, நகைக் கடை நடத்துபவர், அறநிலையத்துறை பணிபுரிதல், அமைச்சர், வங்கிப்பணி, ஆடிட்டர் போன்ற துறைகளைச் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்தால், சிறப்பாக வெற்றி பெறலாம்.