நடிகர் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். அவர் பதவிக்கு வந்ததில் இருந்து அவர் மீது ஒரு தரப்பினர் பல குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
சில மாதங்கள் முன்பு சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டது பிரச்சனையாகி, விஷாலை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியில் உள்ள அனைவரும் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஒரு சிறப்பு அதிகாரியை அரசே நியமித்துள்ளது. அவர் தான் இனி தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை கவனிப்பார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.