சரித்திர கதையில் பிரம்மாண்ட படத்தில் களமிறங்கும் தனுஷ்!

நடிகர் தனுஷ் வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் வெற்றி மாறனுடன் அசுரன் படத்தில் இறங்கியுள்ளார். அடுத்தடுத்து அவருக்கும் படங்கள் தயாராக இருக்கின்றன.

அந்த வகையில் அடுத்ததாக வேள்பாரியின் கதையில் படமாக்கும் முயற்சியில் இறங்கி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் 14 இன மக்களுக்கு தலைவனாக இருந்தவர் வேளிர் குல பாரி.

அப்பகுதியை கேட்க குலசேகர பாண்டியன், சேர, சோழ மன்னர்களோடு சேர்ந்த கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதை எதிர்த்து போராடுகிறார் வேள் பாரி. வெற்றி யாருக்கு என்பது தான் கதை.

வார இதழில் இதை 100 வாரங்களுக்கு மேலாக தொடராக எழுதி நல்ல வரவேற்பை பெற்றவர் சாக்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன்.

தற்போது மதுரை தொகுதி லோக்சபா வேட்பாளராக களத்தில் போட்டியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் எழுதிய காவல் கோட்டம் நாவலை வைத்து தான் அரவான் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.