நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த படம் தேவ். இந்த படத்திற்கு அடுத்ததாக கைதி படத்திலும் ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார், கார்த்தி.
இதற்கிடையில் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கடந்த மாதமே வெளியாகியிருந்தது. மேலும் இப்படத்தில் ஜோதிகாவும் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளதாக தற்போது புதிய போஸ்டர் ஒன்றுடன் அறிவித்துள்ளனர். அக்டோபர் மாதம் 27ஆம் தேதியில் வருகின்ற தீபாவளி தினத்தில் தான் தளபதி விஜய்யின் தளபதி-63 படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thrilled to share screen space with Anni for the first time 🙂 & looking forward to work with #JeethuJoseph sir. #Sathyaraj sir brings more strength to us. With all your blessings shoot begins today. #Jyotika @govind_vasantha @rdrajasekar @ansononline #ParallelMindsFilms pic.twitter.com/uqPWoCnygr
— Actor Karthi (@Karthi_Offl) 27. April 2019