இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதா விஸ்வாசம்?

தல அஜித்தின் நடிப்பில் இந்த வருடம் துவக்கத்தில் வெளியாகி மிக பெரும் ஹிட் அடித்த படம் விஸ்வாசம். இயக்குனர் சிவாவுடன் அஜித் 4வது முறையாக இணைந்து நடித்திருந்த இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சில நாட்களாகவே சிவா திட்டமிட்டு வந்தாராம். மேலும் இப்படத்தின் கதையையும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் கூறியுள்ளார். முழு கதையையும் கேட்ட ஷாருக்கான், ஏற்கனவே பல படங்களில் நடிக்க ஒப்பு கொண்டதால் கால்ஷீட் பிரச்சனையால் விஸ்வாசத்தின் ரீமேக்கை நிராகரித்து விட்டாராம்.

இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் விஜய்யின் தளபதி-63 படத்தில் வில்லன் வேடத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.