நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் பலியான மக்களுக்கு புத்தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று மாலை மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும்,
நாட்டில் ஏற்பட்ட தாக்குதலில் பலியான மக்களுக்கு ஆத்மா சாந்தியடையவும், வைத்தியசாலையில் காயங்களுக்குள்ளானவர்கள் விரைவில் குணமடையவும், நாட்டில் இவ்வாறான அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்கும் இன்று மாலை புத்தளம் நரக்கள்ளி ஸ்ரீ மகா காளியம்மன் தேவஸ்தானத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை 2 நிமிடங்கள் மௌனஅஞ்சலியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது