கொழும்பில் கின்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரின் காணொளியை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
கொழும்பில் பிரதான மூன்று ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 30 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கிறிஸ்தவர்களையும் வெளிநாட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே இந்த தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Telford Grooming Gang: Where Is The Outrage? https://t.co/p1pCHhZAv2 https://t.co/oDYlsGnawn
— AnySource News (@AnySourceNews) 22. März 2018
இதேவேளை, இலங்கையில் கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பல் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த தற்கொலை தாக்குதல் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்கின்றோம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று சிறப்பு அதிரடி படையினரால் முற்றுகையிடப்பட்ட வீட்டிலிருந்தே இந்த கும்பல் காணொளியை வெளியிட்டுள்ளது.
அவர்களின் முழுக் குடும்பமும் ஆயுதங்களுடன் கூட்டாக இந்த காணொளியை வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த காணொளி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தாக்குதலில் ஆறு ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
#Breaking : ISIS/linked groups spread a video of 3 IS fighters with their kids in their home in #Kalmunai, #Sainthamaruthu which were raided yesterday.#SriLankaAttacks #SriLanka #SriLankaAttacks pic.twitter.com/up1OEF24aM
— Gobyshankar (@GobyDot) 27. April 2019