ஆண்கள் தெரிஞ்சிக்க வேண்டிய 5 விடயங்கள்…

பெண்கள் தங்கள் மனதில் இருக்கும் ஆசைகளை வெளியே சொல்லாமல் தங்களுக்குள்ளே மூடிவைத்து கொள்வார்கள். பெண்களின் எதிர்பார்ப்புகளை சில நேரங்களில் ஆண்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகும்போது, அதற்கு ஆண்கள் சொல்லும் நியாயமான காரணங்களைப் பெண்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தமக்கு பிடித்தமானவை எது? என்ன? என்பதை தங்கள் கணவரிடமோ, காதலனிடமோ சொல்ல பயப்படும், சில விடயங்கள் உள்ளன. அவைகளை ஆண்கள் புரிந்து கொண்டு நிறைவேற்ற வேண்டும். அப்படியான 5 முக்கிய விடயங்களை காண்போம்..

எதிர்பாலத்தை பற்றி

பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றி நிறைய நேரங்களில் யோசிப்பது உண்டு. எதிர்காலத்தை பற்றி கனவுகள் கண்டிருப்பது நிஜ வாழ்க்கையில் சாத்தியமாகாமல் இருக்கும். இதற்கு காரணம் கணவன் – மனைவிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளிதான். அதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

பாராட்டுவது

பெண்கள் கணவரிடம் இருக்கும் அன்பு, அழகு, பழக்கவழக்கங்கள், சம்பளம் ஆகியவற்றை பார்ப்பது கிடையாது. தன் ஆசையை பூர்த்தி செய்யும் கணவரையும், தான் செய்யும் செயலை பாராட்டுவதையும் தான் விருப்புவார்கள். இந்நேரங்களில் ஆண்கள் அவர்கள் எண்ணங்களை அறிந்து எதிர்ப்பார்ப்புகளை தரவேண்டும்.

நிதானம்

தான் செய்த தவறுகளை பெண்களிடம் ஒப்புக்கொண்டு நிறைகுறைகளை சரி செய்ய வழிகளை கேட்கலாம். இதனால் உங்களிடம் இருக்கும் அக்கரை வெளிபடுவதால் பாசம் அதிகரிக்கும். அதைவிட்டு சண்டை போடுவது பிரிவையும், மனகசப்பையும் உண்டாக்கும்.

வேலை

வேலை பளுவால் அதிகநேரம் அலுவலகத்தில் இருப்பது நல்லது கிடையாது. அப்படி இருந்தாலும் மனைவியை தொடர்பு கொண்டு சில நேரம் பேசலாம். கணவன் – மனைவிகளுக்கு இடையே சரியான புரிதல் இருக்க வேண்டும்.

ஷாப்பிங்

வெளியிடங்களுக்கு செல்லும் போது மனைவிக்கு பிடித்தவற்றை வாங்கி தர வேண்டும். மற்றவர்கள் முன் மனைவியை குறைகூறவோ, இழிவாக பேசுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சரியான நேரம் பார்த்து செய்த தவற்றை புரியவைப்பது, அமைதியான, பாசமான வாழ்க்கைக்கு அழைத்துச்செல்லும்.