இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் நம்மில் எத்தனை பேருக்கு முந்தைய ஜென்ம கதைகளில் நம்பிக்கை இருக்கும் என்பது பெரிய கேள்விகுறி தான்.
ஆனால், இன்றளவும் தனது முந்தைய ஜென்மத்தில் நான் இப்படியாக இருந்தேன் என கூறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில், நம்பிக்கை இருக்கிறது, இல்லை என்பதை தள்ளி வைத்து, நீங்கள் கண்ட அந்த நபர் உங்கள் முந்தைய ஜென்ம துணை என்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டறிய முடியும் என சில குறிப்புக்கள் கூறுகின்றன.
அறிகுறி 1
நீங்கள் பார்த்த அந்த முதல் நொடியே அவரை நீங்கள் வெகுநாட்கள் அறிந்த ஒரு நபர் போன்ற எண்ணம் எழும். நேர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும். நீங்கள் இருவரும் உங்கள் இருவரை பற்றி முதல் சந்திப்பிலேயே அதிகம் பகிர துவங்குவீர்கள்.
அறிகுறி 2
அவரை நோக்கும் உங்கள் உயிர் தூண்டப்படும். ஒரு விசித்திரமான எண்ண அலை உண்டாகும். நேரம், காலம், சூழல் மறந்து அவருடன் பழகுவீர்கள்.
அறிகுறி 3
அவரை பற்றியே சிந்தனை இருக்கும். அந்த நபரை பற்றி பகல் கனவு காண்பீர்கள். இரவிலும் அவரே கனவில் தோன்றலாம். உங்களிடம் அவர் கனவில் ஏதோ கூற வருவது போல காட்சிகள் வரும்.
அறிகுறி 4
கண்கள்! அவரது கண்கள் உங்களிடம் எதையோ சொல்லும். அவரது கண்களை பார்க்க, பார்க்க வசீகரம் அதிகரிக்கும். உங்களை பார்வையால் மயங்க செய்வார்கள். கண்களை பார்த்தே நேரம் கழியும் தருணமும் உண்டாகும்.
அறிகுறி 5
அதுவரை உங்களுக்கு டெலிபதி மீது நம்பிக்கை இல்லை என்றாலும், அவரை பார்த்த பின்னர் டெலிபதி வர்க்கவுட் ஆகும். நீங்கள் அவர எண்ணிய பொழுதில் அவர் உங்கள் முன் தோன்றலாம், கால் செய்து பேசலாம்.
அறிகுறி 6
எல்லாமே சற்று தீவிரமாகவே அமையும். அவருடன் பேசுவது, பழகுவதி அனைத்திலும் தீவிரம் காட்டுவீர்கள். உங்கள் மன ரீதியான இணைப்பும், உடல் ரீதியான இணைப்பும் என எல்லாம் அளவுக்கு அதிகமான ஈர்ப்பில் கலக்கும்.
அறிகுறி 7
நீங்கள் செல்லும் இடங்களை, அங்கு ஏற்கனவே நீங்கள் இருவரும் சென்று வந்தது போன்ற நினைவுகள் எழும்.
அறிகுறி 8
அவருக்கு நீங்கள் அடிக்டாகி காணப்படுவீர்கள். அவருடன் உடல் தீண்டும் போது ஏதோ ஒரு எனர்ஜி உண்டாவது போன்ற உணர்வு வெளிப்படும். அவர் உங்களை நெருங்கும் போது உங்கள் உணர்வு உச்சத்தை அடையும்.
அறிகுறி 9
அவரது உடல் வாசம் உங்களுள் வேறு விதமான எண்ணங்களை தூண்டும்.
அறிகுறி 10
நீங்கள் அவருடன் பழகும் ஒவ்வொரு தருணமும் ஸ்பெஷலாக அமையும். அவருடன் பழகும் நாட்களை ஒப்பிடும் போதுவாழ்வில் வேறு எதுவும் தேவையில்லை என்ற எண்ணத்தை உங்களுக்குள் உருவாக்கும்.