கர்ப்பம், குழந்தைகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் சமீரா ரெட்டி. சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் சமீரா ரெட்டி. அஜித்தின் அசல், விஷாலின் வெடி, மாதவனின் வேட்டை உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திவிட்டார். அவருக்கு நான்கு வயதில் ஹன்ஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சமீராக இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
நான் திருமணமாகி இரண்டு மாதங்களில் கர்ப்பமாகிவிட்டேன். பிரசவம் முடிந்த பிறகு மீண்டும் நடிக்க வருவது என்று திட்டமிட்டேன். ஆனால் எல்லாம் நேர் எதிராகிவிடட்டது. கர்ப்ப காலம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
நான் முதல் முறை கர்ப்பமாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனையால்(placenta previa) 4 முதல் 5 மாதங்கள் படுக்கையில் இருந்தேன். அதனால் வெயிட் போட ஆரம்பித்துவிட்டது. படங்கள், விருது விழாக்கள் என்று இருந்த எனக்கு படுத்த படுக்கையாக இருந்தது கஷ்டமாக இருந்தது.
பிரசவம் ஆன பிறகு வெயிட் போட்டு 102 கிலோ ஆகிவிட்டேன். 32 கிலோ கூடுதல் வெயிட் போட்ட பிறகு எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. நான் வெளியே சென்றபோது என்னை பார்த்தவர்கள், சமீரா ரெட்டியா இது, என்னாச்சு என்று வியந்தனர்.
ரொம்ப வெயிட் போட்டதால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்தேன். தற்போது நான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன். இந்த பிரசவத்தின்போதும் வெயிட் போடும் என்று தெரியும். எப்பொழுதுமே கிளாமராக இருக்க முடியாது என்கிறார் சமீரா ரெட்டி