உங்கள் பிறந்த தேதி என்ன? இந்த விலங்கினங்களின் குணங்கள் தான் இருக்குமாம்!…

இந்திய ஜோதிடம் மற்றும் சீன ஜோதிடம் பற்றி நாம் அனைவருமே அறிந்திருப்போம்.

அமெரிக்க ஜோதிடம், மீசோ அமெரிக்கன் காலண்டரைக் கொண்டு மனிதர்களை விலங்குகளுடன் ஆன்மீக ரீதியில் இணைத்துக் கூறுகிறது.

அத்தகைய அமெரிக்க ஜோதிடத்தில் உள்ள ராசியின் படி, ஒருவரின் குணநலன்களை பற்றி தெரிந்துக் கொள்ள பிறந்த தேதி மட்டுமே போதும்.

நீர்க்கீரி (Otter)

ஜனவரி 20 – பிப்ரவரி 18 தேதிகளுக்குள் பிறந்தவர்களது அமெரிக்க ராசிக்குரிய விலங்கு நீர்க்கீரி. இவர்கள் பரலவான திறன்களையும், எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமான மற்றும் அசாதாரண வழிகளில் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

ஓநாய் (Wolf)

பிப்ரவரி 19 – மார்ச் 20 தேதிகளுக்குள் பிறந்தவர்களின் அமெரிக்க ராசிக்குரிய விலங்கு ஓநாய். இந்த மிருகம் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியது. அதே சமயம் இது சுதந்திரமாக இருக்க விரும்பும் ஓர் விலங்கும் கூட.

எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களும் ஓநாய் போன்ற குணங்களைத் தான் கொண்டிருப்பார்கள்.

ராஜாளிப்பறவை (Falcon)

மார்ச் 21 – ஏப்ரல் 19 வரையில் பிறந்தவர்கள் ராஜாளிப்பறவையின் குணத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த அமெரிக்க ராசியைக் கொண்டவர்கள் சிறந்த தலைமைத்துவ பண்பைக் கொண்டிருப்பார்கள்.

இருந்தாலும், இவர்களுக்கு அடிக்கடி ஆலோசனை தேவைப்படும். மேலும் இவர்களிடம் ஆணவம், திமிர், கர்வம் அதிகம் இருக்கும். இருப்பினும் இவர்களுக்கு சரியான ஆதரவாக ஒருவர் இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள்.

நீர்நாய் (Beaver)

ஏப்ரல் 20 – மே 20 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் நீர்நாய் குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர்.

இவர்கள் வணிகம் புரிவதில் சிறந்தவர்கள் மற்றும் எந்த ஒரு வேலையையும் விரைவில் பெற்று சீக்கிரம் முடிக்கக்கூடியவர்கள். மேலும் இந்த ராசியை சேர்ந்தவர்கள் கடின உழைப்பாளிகள்.v

மான் (Deer)

மே 21 – ஜூன் 20 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் மான் குணத்தைக் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள் மற்றும் நன்கு உரையாடுவார்கள்.

மரங்கொத்தி (Woodpecker)

ஜூன் 21 – ஜூலை 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களது அமெரிக்க ராசி மரங்கொத்தியாகும். மரங்கொத்தி மற்ற ராசிகளை விட சாந்தகுணம் கொண்டது மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டது.

ஆனால் இதன் தாய்மை குணத்தால், ஆதிக்க மனோபாவம் மற்றும் பொறாமை குணம் சற்று அதிகம் இருக்கும். எனவே இத்த தேதிகளில் பிறந்தவர்களின் குணமும் மரங்கொத்தி போன்று தான் இருக்கும்.

சால்மன் (Salmon)

ஜூலை 22 – ஆகஸ்ட் 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் சால்மன் மீனின் குணத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் நேர்மறை ஆற்றலை மற்றவர்களுக்கு உட்புகுத்துவார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு வேலையையும் ஏற்றுக் கொண்டு முன்வந்து செய்வார்கள்.

கரடி (Bear)

ஆகஸ்ட் 22 – செப்டம்பர் 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் கரடியின் குணத்தைக் கொண்டவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயங்களையும் நடைமுறை அணுகுமுறையுடன் மேற்கொள்வார்கள்.

மேலும் இவர்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் அதிகமாக சந்தேகப்பட்டாலும், பொறுமைசாலிகள் மற்றும் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.

அண்டங்காக்கை (Raven)

செப்டம்பர் 22 – அக்டோபர் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் அண்டங்காக்கையின் குணத்தைக் கொண்டிருப்பதாக அமெரிக்கன் ஜாதகம் கூறுகிறது.

இத்தகையவர்கள் நல்ல ஆற்றல்மிக்கவர்கள் மற்றும் தொழில் முனைவோர். இவர்கள் நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் தன்னுடன் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் செயலால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள்.