பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு மூன்று சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
யு.இ.எப்.ஏ இந்த தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெய்மர் கடந்த மார்ச் மாதம 6 ஆம் திகதி நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் காயத்தால் விளையாடவில்லை.
எனினும் போட்டி முடிவு நடுவர்கள் அளித்த பெனால்டி தீர்ப்பால் பி.எஸ்.ஜி. அணிக்கு எதிராக அமைந்தது.
இதனால் கோபமடைந்த நெய்மர், நடுவர்களை தரக்குறைவாக சமூகவலைதளத்தில் விமர்சித்தார்.
இதுதொடர்பாக ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மேற்கொண்ட விசாரணைகளில் நெய்மர், நடுவர்களை தரக்குறைவாகவும், அவமரியாதை செய்யும் விதமாகவும் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் நடுவர் அறையினுள் அத்துமீறி நுழையவும் முற்பட்டள்ளார். இதனால் அவருக்கு 3 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.