மடு பிரதேசத்திலுள்ள பெரியபந்திவிருச்சான் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கைக்குண்டு நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது,
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்,
மடு தேவாலயத்தை அண்மித்த பெரியபண்டிவிரிச்சான் (பெரியபந்திவிருச்சான்) 16-வீட்டுச்சந்தி பகுதியில் உள்ள வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டு பகுதியில் வீட்டின் உரிமையாளர் கைக்குண்டு ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மடு பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் விரைந்துவந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த கைக்குண்டை எடுத்து சென்றுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது.