திடீரென மாதா சொரூபம் சாய்ந்ததால் பெரும் பரபரப்பு!

உடுவில் அம்பலவாணர் வீதியில் அமைந்துள்ள செபமாலை மாதா தேவாலயத்தின் மேற்கூரையில் அமைந்துள்ள மாதா சொரூபம் சாய்ந்த்தால் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலமையை சுமுகநிலைக்குக் கொண்டு வந்தனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும்,

ஆலயத்தின் மேற்கூரையில் கண்ணாடிக் கூட்டுக்குள் மாதா சொரூபம் அமைக்கப்பட்டிருந்தது, அந்த சொரூபம் இன்று மாலை அவதானிக்கப்பட்ட போது சாய்ந்த நிலையில் காணப்பட்டது.

இந்த விடயம் தேவாலயத்துடன் தொடர்புடையவர்களுக்குத் தெரியப்படுத்த ஊர் முழுவதும் தகவல் பரவியது. அதனால் மக்கள் கூட்டம் கூடிய நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் அங்கு வருகை தந்து மக்கள் கூட்டத்தை கலைத்து சொரூபம் சாய்ந்தமை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.