சூர்யா, ஜோதிகா ஜோடி என்றால் அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடிக்கும். காதல் ஜோடியான இவர்களுக்கு திருமணமாகி தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.
ஆனால் இன்னும் இந்த குட்டி பிரபலங்கள் சினிமா பக்கம் வரவில்லை. படிப்பு, விளையாட்டு என இருக்கிறார்கள். தியா சில நாட்களுக்கு முன் மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பை பெற்றார்.
தற்போது தேவ் தேசிய அளவில் ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். 40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தண்டர்கேக் பிரிவில் தேவ் வெற்றியடைந்துள்ளார். இதை காண சூர்யா, ஜோதிகா இருவரும் சென்றிருந்தார்களாம்