ரித்தீஷ் மரணத்திற்கு காரணம் இந்த நடிகையா?

நடிகை பிரியா ஆனந்த் நடித்து எந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆகவில்லை என்பதால், அவர் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டவர்.

இந்த நிலையில், அவருடன் நடிக்கும் கலைஞர்களுக்கும் ஆபத்து என்று பேச்சு கிளம்பியுள்ளது. இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் பிரியா ஆனந்துடன் நடித்து, அவருடன் நெருக்கமாக பழகிவந்த ஸ்ரீதேவி திடீரென மரணம் அடைந்தார். அதேபோல் எல்.கே.ஜி. படத்தில் நடித்து பிரியா ஆன்ந்துடன் நட்பான ஜே.கே.ரித்தீஷ் சட்டென செத்துப்போனார்.

இந்த விவகாரங்களைக் கிளறி, இனிமேல் பிரியா ஆனந்துடன் நடிக்கும் கலைஞர்களுக்கு ஆபத்து என்ற ரீதியில் ரசிகர் ஒருவர் பதிவு போட்டதும், கொந்தளித்து சாமியாடிவிட்டார் நடிகை பிரியா ஆனந்த்.

பொதுவாக என்னைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு மதிப்பு கொடுப்பது கிடையாது. ஆனால், இது வீண் பழி மட்டுமின்றி எல்லோரையும் அவமதிப்பதாக இருக்கிறது என்று டென்ஷனாகியிருக்கிறார். பூ போன்ற நடிகையின் மனதில் கல்லை எறிந்துவிட்டார்களே…