சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் வாக்களிக்க சென்ற போது, அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் விட்டுப்போனது.
இதனால், சிவகார்த்திகேயன் வாக்களிக்க முடியாமல் போனதாக செய்தி வர, ஒரு சில நிமிடங்களிலேயே தான் வாக்களித்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.
இதை தொடர்ந்து வாக்களார் பட்டியலில் பெயர் இல்லாமல், எப்படி அவர் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் சிவகார்த்திகேயன் மீது புகார் எழுப்பியுள்ளது.
இதை தொடர்ந்து முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் இந்த விஷயத்திற்காக சிவகார்த்திகேயனை கைது கூட செய்யலாம், அதற்கு சட்டத்தில் இடம் இருக்கின்றது, இதற்காக தற்போதே அவர் தன் வக்கீலுடன் பேச்சு வார்த்தையில் இருப்பதாக கூறியுள்ளார்