ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் லொறி ஒன்றும், காரொன்றும் மோதுண்டதில் கார் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை 08.30 மணி அளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவம், ஹட்டனில் இருந்து கொட்டகலை பகுதியை நோக்கி பயனித்த காரும் லொறியும் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, வீதியின் நடுவில் நாய் ஒன்று குறுக்கே சென்றதால், நாயை காப்பாற்ற காரினை செலுத்திய சாரதி தடை ஆழியை நிறுத்திய போது பின்னால் வந்த லொறி, காரில் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பாக வர்த்தக நிலையம் ஒன்றில் பொறுத்தபட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
எனவே சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.