மஹிந்த – கோத்தா சந்திப்பு !

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் பிரதானிகளுக்குமிடையில் சந்திப்பொன்று மஹிந்த – கோத்தா சந்திப்பு ! பேசப்பட்டதென்ன ?

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்புத்தரப்புகளின் பிரதானிகளுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி, முன்னாள் பொலிஸ் மா அதிபரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, உதய கம்பன்பில மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் தற்போதைய நிலைமை தொடர்பில், நாட்டின் எதிர்கால தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அறிக்கையொன்றினையும் சமர்ப்பிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்புத்தரப்பு பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.