மாவனல்லை நகரில் அமைந்துள்ள சிட்டி கல்லூரி கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கட்டிடத்தின் நான்காவது மாடியிலேயே இந்த தீபரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.