4 வருடம் ஈரோட்டில் கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்து வந்த இளைஞர் கைது..!!

ஈரோட்டில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்துகொண்டு நான்கு ஆண்டுகளாக மிரட்டியே, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு காந்தி நகரைச் சேர்ந்த அந்த மாணவி, திண்டல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

இந்த நிலையில்தான், கல்லூரிக்கு வெளியில் அமைந்துள்ள கடைக்கு சென்று வந்தபோது, மாணவிக்கு, வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன், ஏற்கனவே திருமணமானவர். இருந்தாலும், மாணவி, அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், மாணவியின் பிறந்த நாளன்று, இருவரும் ஏற்காடு சென்று தனிமையில் இருந்துள்ளனர்.

இதனை செல்போனில் ரகசியமாக வீடியோவாகவும் எடுத்துள்ளார் ராதாகிருஷ்ணன். ஏற்காடுக்கு சென்று ஜாலியாக சுற்றித் திரிந்த ஜோடிகள் மீண்டும் ஈரோடு திரும்பினர். ஆனால் அதன்பிறகுதான், ராதாகிருஷ்ணன் தனது உண்மை முகத்தை வெளியே காட்டியுள்ளார்.

தன்னுடன் உல்லாசமாக இருக்காவிட்டால், இந்த சில்மிஷ வீடியோக்களை, இணையதளத்தில் பதிவேற்றுவேன் என்று, மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி, ஈரோடு பேருந்துநிலையம் எதிரேயுள்ள, லாட்ஜுக்கு சென்றுள்ளார். அங்கு ராதாகிருஷ்ணன் அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதையும், ரகசியமாக வீடியோவாக எடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து, ராதாகிருஷ்ணன் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக மாணவியை தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.

இருமுறை இந்த மாணவிக்கு கருக்கலைப்பும் நடந்துள்ளது. ஆனால், மாணவியின் செயல்பாடுகளில் மாற்றத்தை கவனித்த அவரது, பெற்றோர் இது குறித்து கேட்டனர். தனது பெற்றோரிடம் நடந்த உண்மையை மாணவி கூற, அவரது பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவங்களையடுத்து, ஈரோட்டிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.