நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு சினிமாவில் நல்ல இடத்தை தக்க வைத்துள்ளார். பாகுபலி படத்தில் ராஜமாதா கேரக்டர் அவருக்கு மிக முக்கியமானதாக அமைந்தது.
விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் விலை மாதுவாக நடித்திருந்தார். அவரின் இந்த மிரட்டலான நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவர் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார்.
மேலும் இப்படத்தில் விஜய சாந்தி, ஜெகபதி பாபு ஆகியோரும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.